கவிதாஞ்சலி நண்பனுக்கு

தேவையறிந்து முகம் பார்த்து
செய்தவனே..
தேவை பட்டும் எந்த
எதிர்பார்ப்பின்றி பழகியவனே ?

வாழ்க்கையின்
வலிகள் பல என்னை
நொறுக்கிய போதெல்லாம்.
அழகான சிற்பமாய் செதுக்கிய
சிற்ப்பியே..

முகம் பார்க்க தானே
இருவரும்
கண்ணாடியானோம்..
ரசம் போன பின்னால்
வெறும் கண்ணாடி
எனக்கேது மதிப்பு..

காதலில்லை,அதனால்
உறவில்லை,
ஒரு வேளை சோறில்லை..
இப்படி மீண்டும்
பல முறை உனக்காக
அனாதையாக
காத்திருக்கிறேன்,,.
வருவாயா எனை தேற்ற?

தெய்வமானவனே
நாத்திகனான நான்
இப்பொழுதெல்லாம்
ஆலயம்
சென்று வருகிறேன்..
யாரோ சொன்னார்கள்
தெய்வங்கள் அங்கு தான்
வாழ்கின்றனவாம்
அதனால்..

எழுதியவர் : சித்து (20-Jan-12, 4:05 pm)
சேர்த்தது : siddhu
பார்வை : 376

மேலே