உன் நட்பிற்காக வாழ்கிறேன் தோழி ..............
நான் காதலிக்கிறேன்
எனத் தெரிந்ததும்
என்னை விட அதிக
சந்தோசம் கொண்டாய் .......
பல சமயம் கண்ணீராகவும்
சில சமயம் கவிதையாகவும்
எனக்காக அவளிடம்
தூது சென்றாய் ......
எட்டி உதைக்கப்பட்ட பந்தாய்
எத்தனை முறை நீ திரும்பி வந்தாலும்
என் முகம் பார்த்த மறு நொடி
மீண்டும் செல்வாய் அவளிடம் தூதாய் ......
அவளுக்காக நான் வடித்த கவிதைகள்
அவளால் படிக்கப்பட்டதோ இல்லையோ
அத்தனையும் படிக்கப்பட்டு கவித்திருத்தம்
செய்யப்பட்டனவே உன்னால் ........
அவளை பற்றி நான்
அதிகம் பேசியதும் உன்னிடம் ......
அவளை பற்றி மட்டுமே பேசிவந்தாய் நீ
எனக்காக ...என்னிடம் .......
காதலால் நான் கவிதையாய் இருந்த போது,
என் எண்ணத்தின் எழுத்துக்களாய் இருந்தது
நீயல்லவா .......
காதல் தோல்வியில் நான்
கவலையுற்ற போது
என் கண்ணீர் துடைத்த கரங்கள்
உனதல்லவா ........
என்னவளின் பிறந்தநாளின் போது
விடியர்காலையிலேயே
விரைந்து சென்று கோவிலில்
அர்ச்சனை செய்த நான் ,
இன்றுவரை விளையாட்டாக கூட
உனக்காக சென்றதில்லை நான்
கோவிலுக்கு .......
அவளின் பிறந்த நாளின் போது
பரிசுப்பொருட்களை
உன்னிடம் கொடுத்தனுப்பிய
நான் ,
ஒரு பேச்சுக்காககூட
உன்னிடம்
சொன்னதில்லை நான்
பிறந்தநாள் வாழ்த்து .....
ஆனால் நீயோ ஜனவரி 26 இல்
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்
முதல் ஆளாய்
இருப்பாய் .....
இன்றாவது கோவிலுக்குச்செல்
என்று செல்ல கோபப்படுவாய்
சந்தோசமாய் இரு என
அன்பு உத்தரவு இடுவாய் ......
இப்படி எனக்காக
எல்லாம் செய்த நீ ....
இன்று ஏன் என்னை
விட்டு சென்றாய் .......
தோழியே ...
உன் பிறந்தநாளை
கொண்டாட வேண்டுமென
ஆசையாய் இருக்கிறது ......
உனக்கு
நல்ல
எதிர்காலம் ஏற்படுத்தி தர
ஆர்வமாய் இருக்கிறது ..........
காதல் தோல்வியின் போது
உன் தோள் சாய்த்து
அன்பான ஆறுதல்
தந்தாய் ........
இன்று என்னை விட்டு விலகி
ஏன் தீராத துயர் தந்து
தினம் தினம் உன் பிரிவால்
கொல்கிறாய்..........
கோபம் தணிந்திடு தோழி ......
மீண்டும் நான் வாழ
நட்புடன் ஒரு வாய்ப்பு கொடு
என் தோழி ........
ஏற்காது போன காதலை நினைத்தால்
கண்ணீர் மட்டுமே வருகிறது ........
பார்த்தும் பார்க்காது போன தோழியே .........
உன்னை நினைத்தால் என் உயிரே போகிறது .......
உணர்ந்து கொண்டேன் தோழி .......
தோல்விகள் தரும் காதல் நினைவுகளை விட ......
தோள் கொடுத்திடும் நட்பின் மகத்துவத்தை .......
மன்னித்துவிடு தோழி.......
மன்னித்துவிடு ........