நான் என்ன செய்ய .........

குட்டி போடும் என
புத்தகத்தின் நடுவே நான்
வைத்திருந்த மயிலிறகு ......

இன்றுவரை
குட்டிகள் ஏதும்
இடவில்லை ........


மனதில் ஒன்றை நினைத்து
இரண்டு விரல்களை நீட்டி
நண்பனை தொடச்சொன்ன செயல் ,


இன்று வரை
நிறைவேறவில்லை .........



ஒருரூபாய் நாணயத்தை சுண்டி
பூ , விழுந்தால் என் எண்ணம் நிறைவேறுமென ,
சுண்டி விழுந்த பூ விற்கு........

இன்று வரை
விடைஏதும்
கிடைக்கவில்லை ........


மனதின் குமுறல்களை
மணிக்கணக்கில் கடவுளிடம்
கதறி அழுதபோதும் .....

பிராத்தனைக்கு பலன்
பிரசாதத்தை விட
வேறெதுவும் கிடைக்கவில்லை ........

என் வருத்தங்களை
நண்பர்களிடம்
பகிர்ந்துகொண்டால் .....

இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம் என ,
என்னை பார்த்து நகைக்கிறார்கள் .....


யாராவது சொல்லுங்கள்
நான் என் செய்ய ..........

எழுதியவர் : ப.ராஜேஷ் (23-Jan-12, 6:28 pm)
Tanglish : naan yenna seiya
பார்வை : 388

மேலே