காதல் புலம்பல்
உனக்குள் உறைந்து
உன் நினைவுகளிலே கரைந்து
காணாமல் போனது என் மனது....
மீட்கவே முடியவில்லை
எனக்குள் இருக்கும் உன்னை...
உன் அருகில் இல்லாத நிமிடங்கள்
என் வாழ்வின் நரகங்களாய்...
தடுமாறி தடம் மாறி போகிறேன்
மறக்கவே முடியாத உன் நினைவுகளால்....
பிரியா