இதயத்தின் அழுகை ...!!!
என்னுள் புதைந்திருந்த அன்பிற்கு அடையாளம் தந்தவன் நீ..
இன்று என்னுள் புதைந்து இருப்பவனும் நீ...!!!!
தெளிவற்ற பயணத்தின் தொடக்கத்தில் நம்மை நிறுத்தியது விதி...
பின் பயணத்தின் நடுவில் உன்னை பிரித்தது விதியின் சதி..!!!
நம் சந்திப்புகள் ஒரு சில முறை மட்டும்..
ஆனால் அதில் இருந்தன சில பல நினைவுகள் என்றும்..!!!
தோழியாக இருந்த என்னை நீ தாரமாக பார்த்தாய் ..
பின் தாரமாக மாறி உனக்கு தாயாக எண்ணிய பொழுது ஏனோ என்னை விட்டு விலகி நின்றாய் ...!!!
உன் கரங்களை பிடித்து அடைய நினைத்தேன் வாழ்வின் ஒலி..
நீயோ வேரொரு கரம் பிடித்து எனக்கு தந்தாய் உயிரின் வலி..!!!
உனக்காக எதையும் செய்ய துடித்த என்னிடம் நீ கேட்பது பிரியாவிடை ...
அதை தர முடுயாமல் எனக்கு நானே அளித்தேன் பல தடை..!!!
உன்னை பிரிய சொல்கிறது என் மதி..
ஆனால் அதற்க்கு எதிர் மறையாய் என் மனம் போடுகிறது சதி..!!!
வேறு கரம் பிடித்து நீ செல்ல இருக்கிறாய் சிரிப்புடன்..
இந்நிமிடம் கூட என் நிலை அறியாமல் நிற்கிறேன் கண்ணீருடன்..!!!