கண்ணீர் காதல்

*****உன்னை பற்றி
கவிதை எழுத முடியவில்லை....
உன்னை நினைக்கும் போது
கண்களில் கண்ணீராக
நீ வழிந்து ஓடுவதால்...

*****உடலின் உழைப்பு வியர்வை என்றால்
மனதின் உழைப்பு கண்ணீர் அல்லவா?
வியர்வை துளிகள் நின்றாலும்
கண்ணீர் துளிகள் மறைவதில்லையே.....

*****நீயே ஒரு கவிதையாய்
என் இதயத்துக்குள்
இடம்பெயர்ந்து விட்டதால் ...
எப்போதும்
உன் பெயர் சொல்லியே துடிக்கிறது....


******அக்னி சாட்சியாக இனி
திருமணம் நடந்தாலும்
மனசாட்சியை பொறுத்தவரை
நீதானே என் முதல் கணவன்...
உன்னை நினைத்து வாழும் சுகம்
வேறு ஒருவரை மணப்பத்தின்
மூலம் கிடைத்துதான் விடுமா???

******என் இதயக் கூட்டில்
நீ ஏற்றிய காதல் தீபம்
என் உடல் கட்டையில் போனாலும் அழியாதது...

******சுற்றும் பூமியில்
நீ சுற்றி கொண்டு இருந்தாலும்
உன்னை எப்போதும் சுற்றி கொண்டு இருப்பது என் நினைவுகள் மட்டுமே....

***** கண்ணீர் துளிகளில்
என் காதல் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கும்.....

எழுதியவர் : priya (25-Jan-12, 12:19 am)
Tanglish : kanneer kaadhal
பார்வை : 489

மேலே