மார்க் போட்டுக் கொள்ளும் மகான்கள் வாழ்க.!

மட்டமான ரசனை,மலிவான வார்த்தை
கவிதையென்று ஒரு கோர்வையாக,
கருத்தேயில்லாத கவிதைகள் ஆயிரம்
இங்குண்டு.!
ஆனால் அதற்கும் மதிப்பெண் என
நூற்றுக்கணக்கில் பதிவாகிறது.
அதுதான் எப்படி.?
இங்கு கருத்தால்,அதன் திறத்தால்
வெல்வதற்கு,மற்றவர் மனதில் நிற்பதற்கு
சிந்திக்காத மனமெல்லாம்,வெறும் மதிப்பெண்களைக் கூட்டி,
சிறப்பாகிவிடலாம் என்று நினைப்பது எவ்வளவு அறியாமை.!
நமது படைப்புகளை,மற்றவர்கள்தானே
மதிப்பிடவேண்டும்.!
நாமே மதிப்பிட்டுக் கொள்வது ஆரோக்கியமான செயலா.?
சொல்லுங்கள் படைப்பாளிகளே.?
மனசாட்சியுள்ளவர்கள் திருந்தட்டும்.!
மற்றவர்களுக்கு தவறான வழியைக் காட்டாதிருக்கட்டும்.!
படைப்புகளைக் குறித்து நன்று அல்லது சரியில்லை என்று படிப்பவர்கள்,ஒரு வரி விமர்சனம் எழுதினால் கூட,இந்த விபத்தைத் தவிர்க்கலாம் என்பதே எனது கருத்து.
இதில் ஒன்றுபடுவோரும்,மறுப்போரும் பின்னூட்டங்களில் இணையுங்கள்.! வரவேற்கிறேன்.!
-அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (25-Jan-12, 10:35 pm)
பார்வை : 343

சிறந்த கட்டுரைகள்

மேலே