சிகரெட்
ஒரு சிகரெட் என்பது எப்போதும் ஒரு சிகரெட் மட்டுமேயல்ல பழைய காதலின் கனலும் நுனி இழந்த நட்பின் ஞாபகத்துளி ...
கிராமத்துகோயிலின் செந்நிற மதில் பள்ளி மைதான பனைமர நிழல் ஈரம் புரண்ட நகரச்சாலை கல்லூரி நாளின் புகை மிச்சம் நினைவுகளை பரண்களிலிருந்து கிளறும் ஒவ்வொரு சிகரெட்டும் எப்போதும் ஒரு சிகரெட் மட்டுமேயல்ல...!!!