வலிகளின் காரணங்கள்

நம்பியது உண்மை
ஆனால்
விதி விளையாடும்
என்று மட்டும் நம்பவில்லை........

நம்பாமல் இருந்திருந்தால்
நானும் சராசரி மனிதனாய்
வாழ்ந்திருப்பேன் -ஆனால்
நம்பியதால் ..........

நான் என்னை புரிந்துகொள்ள
நம்பி வீழ்ந்து போனதால்
அதுவும் கை கூடியது.......

முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்பட கூடாது என்ற
தத்துவத்தின் அர்த்தம்
கண்டு கொண்டதும் இங்கேதான்.....

வலிகள் மனது எல்லாம்
இருந்தாலும்
வலிகளின் காரணங்கள் என்
வாழ்க்கையை செப்பனிட்டுபோனது...!

எழுதியவர் : (1-Sep-10, 10:41 am)
பார்வை : 378

மேலே