நான் அலைந்ததும் அழுததும் ஒரு காலம்.........!
காதலுக்காக -நான்
அலைந்ததும் அழுததும்
ஒரு காலம்.........
காதல் ஒன்றுமில்லா
வெண்காயம் என்று
கண்டுகொண்டது இக்காலம்.........
மற்றவன் குழந்தையை
கண்டு ஏங்கி எனக்கும்
வேண்டும் மனது அடம் பிடித்ததும்
ஒருகாலம்..........
அத்தணையும் தேவையில்லா
கனவு என்று
தெரிந்து கொண்டதும்
இப்போது............
அன்பும் பாசவும் உண்மை
என்று நம்பி கண்ணை
கசக்கியதும் ஒரு காலம்......
காசைவிட ஏதும்
பெரியது இல்லை என்று
புரிந்து கொண்டதும்-எனக்கு
பொற்காலம்..........!