என்னவென்று நான் சொல்ல..!!

நாம் நடந்து சென்ற பாதையில்
இன்று நான் தேடி செல்கிறேன்
நீ இல்லாத தருணத்தில்..!!!

விழிகள் நிறைய கண்ணீரை
ஏந்திக்கொண்டு
உன் இதயம் நனைக்க
வரும்போதெல்லாம்
என் கண்ணை விட்டு
பிரிந்துவிடுகிறது..!!

கண்ணீர்க்கு கூட
உன்னைய தெரிந்து
விட்டது போல!!


காற்றை குடித்தே
வாழ்ந்தவள் இன்று
நேசம் தின்றே
வேகுகிறேன்..!!

என்னவென்று
நான் சொல்ல..!!
எதைக்கொண்டு
என் மனசை கொல்ல..??

எழுதியவர் : (1-Sep-10, 10:43 am)
பார்வை : 400

மேலே