இனிமையான தருணம்..!

உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
இனிமையான தருணம்..

தூக்கத்தில் கண் விழித்தாலும்
உன் நினைவு போவது இல்லை...
தனிமை பழகி போனது
தனிமையில் உன் நினைவு
இதமாகி போனது...

தூக்கம் தொலைத்தேன்
பல இரவுகளில்...
கனவிலும் நீ வருவதால்..

நீ வரும் நாட்களுக்காக
என் கண்கள் பூத்து விட்டது...
உன்னை காணும் அந்த நொடி
என் கண்களில்
கண்ணீர் மழை நிச்சயம்...
பேச இயலா ஊமையாய் போவேனோ...

அனுதினமும் ஆயிரம்
ஆசைகளோடு நான்
ஆசைகள் நிறைவேறும்
காலம் இல்லை...
என்னை நீ புரிந்து கொண்டால் போதும்
என் வாழ்வு இனிமை பெரும்....

உன்னோடு வாழும்
வாழ்க்கையை விட
உன் புரிதலில் வாழும்
வாழ்க்கை போதும்
எனக்கு..
என்னை நீயும் உன்னை நானும்
புரிந்து வாழும் வாழ்வுதான் நிஜம்...

எழுதியவர் : (1-Sep-10, 10:44 am)
பார்வை : 1002

மேலே