கலைசொல்லன் சிறுகவிதைகள்

தமிழர்கள் தெரிந்தே ஏற்கும்
கலப்படம்
தமிழ்படம்

கடமையை செய் பலனை
எதிர்பாராதே
வாக்களிப்பு

குளித்ததால் கிருமித்தொற்று
வந்தது
வைகையாற்றில்

தன்னிடம் இல்லையெனினும்
உலகுக்கே தரும் நிழல்
சூரியன்

வேகமாக ஓட்டுங்கள்
வேகமாக செல்வீர்கள்
மேலே

தற்காலிக இறப்பு
உறக்கம்

-கலைசொல்லன்

எழுதியவர் : kalaichollan (29-Jan-12, 9:44 pm)
பார்வை : 398

மேலே