அன்புள்ள நட்பே
ஓன்று கூடி அமர்ந்து பேசிய
நாட்கள் எங்கே?
ஒன்றாய் அமர்ந்து உணவு
பகிர்ந்து கொண்ட காலங்கள் எங்கே?
சண்டை என்றாலும்
சந்தோஷம் என்றாலும்
ஒன்றாய் பழகிக்கொண்ட
உறவுகள் எங்கே?
கண்கள் பார்த்த அந்த
நினைவுகளுடன் பேசுகையில்
மனம் வலிக்கத்தான் செய்கிறது
பிரிந்த நண்பர்களை நினைத்து.
உன் இதயம் துடிக்கும்
ஓசையை உன்னால் உணரமுடியும்
உன் உள்ளம் தாங்கும் வலியை
என்னால் மட்டுமே அறிய முடியும் ....