அமரன் கைபேசி

ஊருக்குப் போனதும்
மறக்காம கடிதாசி போடுங்க
என்று கண் கலங்கி
நின்ற காலம் எங்கே ?

கைபேசிய தூக்கிக்கிட்டு
கால் கடுக்க அலையுறாக
காதுலயும் மாட்டுறாக
காதலும்தான் பண்ணுறாக
யாருக்கும் தெரியாம
கண்ணோடு கண்பேசி
காதலித்த ஆத்மார்த்த
காதல் எங்கே ?
கைபேசி தொல்லையால
காதலே புளிச்சதம்மா !

காதுல கைபேசிய வச்சுக்கிட்டு
சீக்கு வந்த கோழியாட்டம்
தலைய சாய்ச்சுக்கிட்டு
பைக்க ஓட்டுறாக
சாலையெல்லாம் ரத்த வெள்ளம்
மனசெல்லாம் பதறுதம்மா !

கைபேசி டவரால
சிறு பறவையெல்லாம்
சீரழிஞ்சு போகுதுன்னு
செத்து மடியுதுன்னு
சொல்லுறாகளே !

கைபேசி
மூளைய அரிச்சுடும்னு
டாக்டருக மூச்சுக்கு
மூன்னூறு தடவ
சொல்லுறாகளே !

மனுஷனும் கேக்கலியே
மாய்மாலம் போகலியே
மனுஷனும் திருந்தலியே
மயக்கம் தீரலியே !

உலகம் நாடக மேடையின்னு
அவுக சொன்னாகளே !
மரண மேடையின்னு
அவுகளும் சொல்லுவாகளோ !

எழுதியவர் : porchezhian (1-Feb-12, 7:35 pm)
பார்வை : 410

மேலே