அந்தநாள் வரும்வரை

ஏழ்மை புயலில்
சிக்கிய மனிதா
கலங்காதே...
இயற்கையின் சதியில்
உன் கால்கள் முடமாகலாம்
கைகள் கூட ஓய்ந்து போகலாம்
ஆனால்
நீ வரையும் ஓவியத்திற்கு
ஒரு குறையும் இன்றி
வரைந்து உயிர்கொடுத்து
உலகம் வியக்க போகும்
நாளை நீ காணத்தான் போகிறாய்
அந்த நாள் வரும் வரை
காத்திரு ....
உலகம் உன்கையில்...

மேகநாதன்

எழுதியவர் : மேகநாதன் (3-Feb-12, 1:46 pm)
பார்வை : 323

மேலே