-------நட்(பூ) உதிர்கிறது--------

-------நட்(பூ) உதிர்கிறது--------

காதலி வசிப்பிடம் தேடி
காலடி எடுத்து வைத்து
புலம்பெயர்ந்த என்
புராதன நண்பனே !

பூவையவள் உனக்கொரு
புதிய உலகமாய்
இன்று கிடைத்திருக்கலாம்.

பாழடைந்த இதய மாளிகையில்
பால் காய்ச்சி
பாவையவள் குடி அமர்ந்திருக்கலாம்.

வாடுதல் மட்டுமே கண்ட வாழ்வில்
கூடதல் இன்பம்
கொண்டு சேர்த்திருக்கலாம்.

உன்னோடு நடை பழகி
உன்னோடு விளையாடி
உன்னோடு சிரித்து பேசி
உன்னோடு சண்டையிட்டு
மண்ணோடு போகும்வரை
என்னோடு இருப்பாய்யென்ற
எகத்தாள நம்பிக்கையை
உடைத்தாயாட....

தங்ககதவு செய்து
தனிமையில் எனைத்தள்ளி
தாழிட்டு அடைத்தாயாட.

இன்று பூத்த ரோஜாவுக்காக
நின்று காத்த வேரை
நிர்மூலமாக்குவது
நியாமா?

உனக்காகவன்றி
உபயமற்றதாய் என்
உயிர் போகுமா?

சொற்ப நொடிகளுக்கு மேல்
நமக்குள் நீடித்த
கலகம் உண்டா?

சொல் நண்பா
நீயின்றி எனக்கோர்
உலகம் உண்டா?

கண்ணீரோடு
கணவன் வீட்டுக்கு
கன்னி மகளை அனுப்பிவைக்கும்
தாயைப் போல
தவித்து போகிறது என் மனசு...

நீ நடந்த காலடிக்கு கீழே
நசுக்க பட்டிருக்கிறது - ஒரு
நண்பர்கள் கூட்டத்தின்
நந்தவனத் தோட்டம்.

காதலி வசிப்பிடம் தேடி
காலடி எடுத்து வைத்து
புலம்பெயர்ந்த என்
புராதன நண்பனே !
போய் வா...

வாடகைக்கு நாம் எடுத்திருந்த
வசந்தகாலம்
நீ வரும்வரை
வாய் பிளந்த பூமியை
வறண்டு கிடக்கும்.

இனி
இதயத்திற்குள்
இலையுதிர் காலம்.
இமைகளோ
மழை பெய்து வாழும்.

---தமிழ்தாசன்---

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (4-Feb-12, 4:16 am)
பார்வை : 264

மேலே