பெருந்திணைக் காதல் ......................!

நீண்ட நாட்களாகி
விட்டது !
நீ
என்னுடன் பேசி !

எத்தனை,எத்தனை
மாற்றங்களில்
நீயும் நானும்
புதை உண்டபோதும்
அவ்வபோது
கொஞ்சம்
இதயத்தை
நம்
இவருக்காய்
இடம் பதிய
வைக்கிறோம் !

தோல்வி கூட
சுகம் தான்
இதோ
யன் துயரத்தை
தாங்க நீ
தோள் கொடுக்கிறாயே!

மழைக்கு
பின் வரும்
வானவில்லை போல்
நாம்
எப்போதாவது ,
பேசிக்கொண்டாலும் ,
பாதிப்பு
மட்டும் ஏனோ ,
பல நாட்களாய்
நீடிக்கிறது !

உன்னுள் நான்!
என்னுள் நீ
நமக்குள் என்ன ?

ஒரு வேளை
இது
ஆன்மாவின் கூட்டு கலவையா ?
இல்லை
அன்பின் அஸ்திவாரமா ?

எது எப்படியோ ,
கங்கை இல்
குளித்தால்
தீரும் பாவம் போல்
உன் நினைவு களை
நினைத்தால்
தீரும்
என் சோகம் !

எத்தனை முறை
கேட்பாய்?
நம்மை போல்
யாரவது
உண்டா உண்டா ?
என்று !
ஒன்று தெரிந்து கொள் !

நீ சூரியன் !
நான் நிலவு !
நான்
உன்னால்
உன் ஒளியால் தான்
வாழ்கிறேன் !
ஆனால்
உன்னை சுற்றிவர
முடியாது ............!

நீ அறிவாயா?
உன் அன்பிற்கு
நான்
கொடுக்கும்
காணிக்கை
எது என்று ?
உன் மனதை
கேட்டுப்பார் !
அது சொல்லும் ,
என்இதயமும்
உனக்கான
ஏக்கமும் தான் என்று ..................................!

எழுதியவர் : yathvika (5-Feb-12, 11:27 pm)
பார்வை : 381

மேலே