ஆயுதம் செய் ஆயத்தம் செய்..!!

வீடு செழிக்க நாடு செழிக்க
உருவாக்கிடு ஓர் ஆயுதம்

சாதி ஒழிய சமயம் மறைய
செய்திடு ஒரு போர்வாள்

பண்பு பெருக ஒழுக்கம் சிறக்க
தீட்டிடு ஒரு கூர்வேல்

சக்தி உயர சாந்தி மிளர
வடித்திடு ஒரு கேடயம்

அன்பு தழைக்க அஹிம்சை பரவ
முனைந்திடு ஒரு கருவி

அறிவே உனது ஆயுதமாகட்டும்
சத்தியமே உனது வழியாகட்டும்..!!

எழுதியவர் : ரத்னா (7-Feb-12, 2:07 am)
சேர்த்தது : RATHNA
பார்வை : 402

மேலே