என் தாய்நாடே திருநாடே..!!

ஏலம் இலவங்கம் மணமணக்கும்
தங்கம் வைரம் மினுமினுக்கும்
முத்து பவளம் கவர்ந்திழுக்கும்

காதல் பேசும் மாளிகையும்
வீரம் பேசும் கோட்டைகளும்
சிற்பம் ஓவியம் கண்மயக்கும்

கோபுரம் கோயில் பக்திமயம்
ஆடல் பாடல் முக்திமயம்
அன்பும் பண்பும் சக்திமயம்

விண்ணை முட்டும் வளர்சிகரம்
விண்ணை தாண்டும் விஞ்ஞானம்
விந்தைகள் பேசும் மெய்ஞானம்

என்றும் வளரும் இந்தியாவே
எங்கள் வாழ்வின் ஒளிவிளக்கே
மங்கா புகழோடு வாழியவே..!!

எழுதியவர் : ரத்னா (7-Feb-12, 3:17 am)
பார்வை : 272

மேலே