மலர் பருகும் தேன் - போலியோ
தாவணி போட்டு மூடிய நல்ல
தாமரைப் பூக்கள் தரையில் கெடக்கு - காதல் ..
தாகம் தவிச்சிருக்கு - நல்ல
தள தள சிவப்பு ஒடம்பு ஜிவ்வுன்னு இருக்கு..!
கண் நிறைய காதல் இருக்கு
கனவெல்லாம் கலர் புல்லா இருக்கு
காதலன் யாரும் வரலே.....
காரணம் சொல்லுறேன் கேளு...
கை இரண்டும் காலோடு
கன்றாவியா சூம்பிப் போயிட்டுது.....என்
கழிவை என்னாலேய தன்னால்
கழுவ முடியாதே...அய்யய்யோ...படு அவஸ்தை !
போலியோ சொட்டு மருந்து
போட மறந்தா எங்க அம்மா.......
பொல்லாத நோயும் வந்து
போச்சி போச்சி கையும் காலும்....
பொறந்திருப்பான் எனக்கும் ஒருவன்...
வண்டாக மலரினிலே தேனுண்ண தருவானே..!