கொஞ்சம் கூட அன்பு வரலே....!
மாட்டுக்குத் தொழுவம் கட்டி
மாடு திங்க புல்லுக் கட்டும் வச்சி
நாயிக்கு கூண்டு கட்டி பிஸ்கட்
நல்ல நல்லதா வங்கிப் போட்டு
கோழிக்கும் சேவலுக்கும் வெது வெதுப்பா
கூடைய போட்டு மூடி வச்சி
கொட்டகையிலே குதிரைக்கெல்லாம்
கொள்ளும் கூட நெறைச்சி வச்சி
எனக்கும் பட்டு மெத்தையே
ஏகாந்தமா விரிச்சி வச்சி
எல்லோரையும் நல்லா நீ
எங்க அப்பா பாத்துக் கிடுதே....
ஏனுன்னு இன்னும் வெளங்கலே
என்னோட தாத்தாவும் பாட்டியும்
திண்ணைக் குளிருலே தவிக்குராக.....
குப்பைத் தொட்டிக்குள்ளே அழுக்கு மூட்டையா
குலுங்கி குலுங்கி அழுவுராக......
வயசாகிப் போன எல்லாம்
வீணாகிப் போய் விடுமா.....?
குறட்டை விடும் அம்மா அப்பா - ஒங்க மேல
கொஞ்சம் கூட அன்பு வரலே....!