என்றும் நான் இருப்பேன்
அன்பே!
நிலவாக நீ இருந்தால்,
உன்னை சுமக்கும் வானமாக நான் இருப்பேன்.
அலையாக நீ இருந்தால்,
அடிக்கும் கரையாக நான் இருப்பேன்.
காற்றாக நீ இருந்தால், உன்னை சுவாசிக்கும் நுரையீரலாக நான் இருப்பேன்.
நீ என் காதலியாக இருந்தால்,
உன்னை காலம் முழுவதும் நேசிக்கும் காதலனாக என்றும் நான் இருப்பேன்...