இயற்கை அன்னையின் இசை ..!!!!!!

கோழி கூவும் அதிகாலை
சாணி தெளித்து கோலமிடும்
பெண்களின் வளையலின் ஓசையும்
கால் தண்டையின் சப்தமமும்
காதில் ஒலிக்கும் இனிமையான இசையாய்..

காகம் கா , கா வென கரைய
கதிரவன் கால் தொடும்
இளமையான் காலை பொழுது
உருவாக்கும் நிசப்தமான காலையை.

கலப்பையை தூக்கிக்கொண்டு காளையை
சோ ,சோ என விரட்டும் குரலின்
அழகான ஹம்மிங் சப்தமும்

உழுவ சென்ற தன கணவனுக்கும்
பள்ளி செல்லும் தன் பிள்ளைகளுக்கும்
விதை விதைக்க செல்லும் அம்மா
விரைவில் சமைபதற்காக உருட்டும்
பாத்திரத்தின் சப்தமும் .........

நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன் அம்மா
எனக்கு தலைவலி என்னும் சிறுவனனின்
சிணுங்கல் சப்தமும் .....
கிராமங்களில் ஒலித்துகொண்டே இருக்கும்.

காணமல் போயின இந்த
இயற்கை அன்னையின் இசைகள் எல்லாம்
கிராம மக்களின் வாழ்கை
நகர வாழ்க்கைக்கு நகர்ந்த போதே !!!!!!!!!!!!!

எழுதியவர் : ப்ரியா ராம் (7-Feb-12, 2:05 pm)
பார்வை : 312

மேலே