மனசாட்சி
பசியற்ற பொழுதுகளில்
தின்ன கிடைக்கும் சிற்றுண்டிகளை
உண்ண முயலும் போது
இறுக்கி
கட்டிய ஒரு குழந்தை
இடுப்பில் ஒரு குழந்தை
ஒட்டிய வயிறுடன்
வாய் திறந்து பசியென்று
கை ஏந்தும் காரிககையை
கவனிக்காமல்
நிற்க முடியுமெனில்....
மனசாட்சி என்பது
சொல்வழக்கில் இருக்கும் ஒரு
சோம்பேறி வார்த்தை.
---தமிழ்தாசன்---