என் குழந்தைக்கு உன் பெயரோடு

விளையாடும் வயதில்
விளையாட்டை -மறந்தேன்
பெண்ணே உன்னோடு
விளையாட- நினைத்ததால் ,
வேகமாய் நடந்த
என் கால்கள் -கூட
உன் அருகே நடக்க
ஆசை பட்டது,
வேகமாய் பேசும்
தாய் மொழி -கூட
உன்னுடன் பேசும் போது
மறந்து விட்டது,
நண்பர்கள மறந்தேன்,
உன்னுடன் நட்பு கொண்டதால்,
ஆயிரம் பேர் இருக்கும்
இடத்தில் கூட உன்னை
அரை நொடியில்
கண்டு பிடிக்கும்
என் கண்களுக்கு ,
அருகில் இருக்கும்
என் நண்பனை கண்டு
கொள்ள முடியவில்லை,
எதோ கரணம்
சொன்னாய் என்னை
பிரிந்து சென்றாய்,
நீ என்னை மறந்திருப்பாய
என்று தெரியவில்லை,
ஆனால் பெண்ணே
என் இதயம் துடிக்கும் -வரை
உன் நினைவோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என் குழந்தைக்கு
உன் பெயரோடு

எழுதியவர் : மணிமாறன் (8-Feb-12, 2:35 pm)
பார்வை : 320

மேலே