காதலிச்சி என்னத்த கண்டே ?
வருக்குறான் வருக்குறான் - அவன்
கடலையே வருக்குறான்
வெருக்குரான் வெருக்குரான் - அவன்
அப்பாம்மாவே வெருக்குரான்
காதலிலே குளிக்கிறான் - காதல்
கன்னி இல்லாட்டி தவிக்கிறான்.....
இளமை எழுதும் தலை எழுத்தில்
இவன அவளால் தொலச்சிப் புட்டான்....
கட்டழகில் கண்ண தொலச்சான்
காதலிலே தன்ன தொலச்சான்
காசெல்லாம் தீர்ந்த ஒடனே
காட்டினாளே டாட்டா அவா...!
கனவு வாழ்க்கை கலைஞ்சு போச்சே
கதறி கதறி மவுன அழுகை - முடிவில்
கட்டினானே கழுதை இறுக்கி
தனக்குத் தானே தூகுக் கயிறு...!
சுருக்குப் போட்டு செத்த சொங்கியே
சொமையா ஏண்டா நீயும் இருந்தே..?
ஒன்னப் பெத்து வளத்த செலவுக்கு
ஒரு நூறு எருமை வாங்கியிருக்கலாம்
பாலாவது கொடுத்திருக்கும் - இப்படி
பாலூத்த வச்சிட்டியே படுபாவி பெத்தவங்கள..!
காதலிச்சி என்னத்த கண்டே
கட்டமன்னா போனே நீயி.......எங்க
கண்ணீருக்குப் பதிலச் சொல்லு....
கடைசி காலத்துலே யாருலே இருக்கா ?