உயிரே! உனக்காக அழுகிறேன்
உயிரே!
உனக்காக அழுகிறேன்
நீ யாருக்காக அழுகிறாய்
உனக்குத் தெரியாது
நீ சிரித்தால்
நான் மலர்வதும்
நீ அழுதால்
ஆந்தையாய் அலறுவதும்
என் உள்ளத்து உணர்வுகள்
மார்க்கமின்றி
கையில் உமையாய்
மனதுக்குள்ளே மடிந்து போகின்றன
ஆனாலும்
உலகம் ஒருநாள் சொல்லும்
உனக்காக அழுதவன்
இவன் மட்டும்தான் என்று!