யார் இவர் யார் இவர் ?

காதுல பூ
வாயெல்லாம்
இளிச்சவாய்
சிரிப்பு
வாழ்நாளெல்லாம்
எதிர் பார்ப்பு
ஐந்தாண்டு
திருவிழாவின்
வி ஐ பி
யார் இவர் ?
சரியாக சொல்பவர்க்கு
காதுல ரோசாப்பூ
இன்னுமா தெரியல்
நீங்கதான் சார்
திருவாளர் வாக்காளர்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Feb-12, 6:22 pm)
பார்வை : 322

மேலே