கடுமையான தணிக்கை வேண்டும்
சமீபமாக வந்த ஒரு தமிழ் சினிமா...
சந்தோசமாக சென்றேன் - என்னுடன்
ஸ்ரீகாந்த் மற்றும் ஜிம்மியும்
சிரிச்சிக்கிட்டே கூட வந்தது........!
படம் ஓடத் தொடங்கி ஒரு டூயட் வந்தது.
ஆ என்று வாயில் கொசு நுழைவது தெரியாமல்
இருட்டில் எல்லாரோடு நானும்
இளமை துள்ளும் ஹீரோ ஹீரோயின் அசைவை
இமை மூடாமல் ரசித்துக் கொண்டிருக்க.....
லொள் லொள் அசிங்கம் அய்யே அருவருப்பு
நாம கூட நாலு சொவருக்குள்ளே இப்போ
நாகரீகமா நடுத்தெருக்குப் போகாமே எப்படி
நல்லவிதமா நடந்துக்குறோம் ?
இந்த கன்றாவிய பாரு ஜிம்மி
இந்த அசிங்கப் புடிச்ச மூவ்மண்ட
இந்த மனுசங்க ஐயோ கூட்டமா ரசிக்கிராங்களே
இங்கே வந்து என் மானமே போகுதே...!
லொள் லொள் லொள் என வருந்திது ஸ்ரீகாந்த்.!
படம் முடிந்து வீட்டுக்கு வந்தோம் - மறுநாள்
சினிமா தணிக்கை ஆணையத்திலிருந்து ஒரு
சிறிய கவரில் அப்பாய்ன்மென்ட் ஆர்டர்...
ஸ்ரீகாந்த் மற்றும் ஜிம்மி இப்போது அவர்கள்
நாகரீக நடத்தையால் தியேட்டரில் பேசிய
நல்ல வார்த்தைகளால் அதை கேட்ட
தணிக்கை அதிகாரி சிபாரிசில் - இப்போது
தணிக்கை குழுவின் அதிகாரியாக நியமனம்..!
முதல் நாள் தணிக்கை தொடங்கியது...!
ஜிம்மி படத்து டைட்டிலே கட் பண்ணு :
மடி சார் மாமியின் மச்சங்கள்....அடத் தூ...!
ஜிம்மி இடைவேளை வரை எல்லாம் கட் :
அசிங்கம் அசிங்கம் என்ன வசனம்
கொஞ்சம் இரு அது என்ன இடைவேளை ?
டு பீஸ் உடையில் ஒருத்தி இருக்க
அவள் இடுப்பு அன்புக் குறியிட்டு
வேளை என்று " இடைவேளை " இருந்தது
நாசமாப் போச்சி அதையும் கட்டு பண்ணு
இடைவேளை பொறகு எல்லாத்தையும் கட்
கடைசில் வணக்கம் என்பதற்கு பதில்
கம் அகைன் என இங்க்லிசில் இருக்க
அதையும் கட் பண்ணியது ஜிம்மி
லொள் லொள் லொள் என்று இன்றுவரை
ஒரு தரமான படத்துக்காக எனது இரண்டு
பாசமுள்ள நாய்கள் ஸ்ரீகாந்தும் ஜிம்மியும்
காத்துக் கொண்டு இருக்கிறார்கள்....!
தயவு செய்து தமிழ் பட தயாரிப்பாளர்களே
தரமான படங்களை கொடுங்கள்
கொலைவெறி காமக் கற்பழிப்புகள் குறையும் !
பச்சை விளக்கு பாத காணிக்கை பாச மலர்
பார்த்து எவரும் பறி போய் விடவில்லை
உங்களிடம்
பாரினையே ஒழுக்கமாக்கும் சக்தி இருக்கிறது
பாதாளத்தில் சமுதாயத்தை ஏன் தள்ளுகிறீர்கள் ?