நான் கொண்ட பேருந்து பயணம்
கல்லூரிக்குச் செல்ல காலதாமத மானதால்
வேகமாய் நானெழுந்து வெகுதூரம் நடந்துச்சென்று
வேண்டியப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன்
தாண்டியேச் செல்லும் தாவணியை ரசித்திருந்தேன்
என்னுடன் கூடிய நண்பர் எல்லாம்
குறிப்பட்ட நேரத்தில் என்னோடு சேர்ந்தனர்
நாங்கள் சோடியைத் தேடும் புறாக்கள்
அனைவரும் ஆடவர் கல்லூரி மாணவர்கள்
பருவத்தில் பொழியாமல் பதுங்கலாம் மழை-
உலகில்
வாலிபப்பருவத்தில் பார்வைகள் பரிமாறாமல் போகுமோ
எதிர்துருவத்தில் விழிகளால் வீழ்த்தியபடி நடந்தவள்
எங்கள்கர்வத்தை அழிக்கவே கவிதையாய் வந்துநின்றாள்
பயணிகள் குடையின்கிழே பார்வைகள் பரிமாற்றம்
கல்லூரிக்கு தாமதம் ஆனாலும் சந்தோஷம்
செல்லரித்த மரம்போல சேதபட்டேன் நானும்
போருந்தில் ஏறிசென்றால் மனதிலோ ஏமாற்றம்
கடந்துபோன நேரம் கண்களுக்கு ஆகாரம்
மறந்துபோ மனதே மற்றொன்று வரும்
நின்றபின் ஏறவும் இதுப்பேருந்து வாசகம்
சென்றபின்னே ஏறுவோம் இதுவாலிப சாகசம்
முட்டி மோதி உள்ளே சென்று
பெண் முகத்தை நாங்கள் தேடுவோம்
தாளம் தட்டியபடியே நாங்கள் எல்லாம்
பேருந்து பயணம் செய்வோம்! செய்வோம்!
வெகுநேரம் நின்ற ஆனொருவர் பெண்ணிருக்கையில் அமரநேர்ந்தது
அதிகாரம்செய்து பெண்ணொருத்தி அவ்ரைஎழுப்ப முயன்றது
பேரம்பேசுதல் போலவே வாக்குவாதம் மூண்டது
பெண்ணொருத்தி அதற்க்கு துணையாயிருந்து பேசியது
அவள் அமர்ந்து பேசிய இடமோ!
ஆண் இருக்கை வரிசையில் உள்ளது
இதைக்கண்ட நடத்துனரும் ஏதும்பேசாமல் சென்றது
இதனையிங்கு நானோ! என்னவென்று சொல்வது
நடத்துனரிடம் ஆயிரம் சில்லறை நோட்டு
ஆயினும்கேட்பார் சரியான சில்லறை நீட்டு
பலக்கைகள் கடந்துக் கிடைக்கபெறும் பயணச்சீட்டு
தன்கற்பை இழந்து கசங்கிவரும் காகிதச்சிட்டு
பத்தடி தூரமெல்லாம் ஒத்தபள்ளங்கள் - தினம்
செத்துபிழைப்பது யாரென்றால் பேருந்து பயணிகள்
மொத்தம் செரிக்கும் பித்தமும் கரையும்
மிகசத்தம் நடுவிலும் தூக்கம் கொடுக்கும்
நின்றபடி செய்யும் பயணமே சுகம்-என்று
கண்டபடி இடிக்கும் காமுகன் தினம்
கண்ணாலே கட்டிக்கொண்டு கைக்கோர்த்து இறங்கும்
கல்லூரி வாலிபருக்கு பேருந்தே தெய்வம்
வாகன நெரிசலால் வருங்கின்ற கோபம்
வண்டிகள் வெளியேற்றும் புகைவிட அதிகம்
ஆயிரமி ருந்தாலும் சிக்கன வாகனம்
அரசாங்கம் கொடுத்த ஆறுச்சக்கர சீதனம்.