காவிரி ஆறு
காவிரி ஆறே
தமிழ் மண்ணின்
நைல் நதியே
வற்றாத காவிரியாய்
வலம் வந்து வளம்
சேர்த்தவளே!
வழி மாறி போனதேனடி?
பருவத்தில் மட்டும்
ஓடி வந்து
அள்ளி அணைப்பதேனடி?
பழைய நினைவுகளை
உசுப்பிவிட்டு
கண்ணாமூச்சி
விளையாட்டு
உனக்கு ஏனடி?
நீ இந்த மண்ணை
சுற்றி வந்த
காலம் ஒன்று.
மனம் உன்னை சுற்றியே
தினம் ஏங்குதடி இன்று.
நீ வருவாயென
உன்னை சுமந்து வரும்
வார்த்தைகளை
நெஞ்சில் சுமப்பதுண்டு``அதில்
நுங்கும் நுரையுமாய்
நீ ஓடுகிறாய்,
சுழல்கிறாய்
பாய்கிறாய்
தேங்குகிறாய்
எல்லாமும்
நாடாளுமன்றத்தில்
தானடி!