ஆசிரிய அன்னைக்கு கிடைத்த பரிசு........

தன் குழந்தைகளின்
கல்வி சத்து எப்படி இருக்கிறதென்று
தெரியாது
அந்த குழந்தையின் கல்வி எனும் சத்தில்
விட்டமின் இல்லாமல் இருக்கிறதா?


அல்லது

இரும்பு சத்து, ப்ரோடீன் என்று எந்த சத்து
இல்லாமல் இருந்தாலும் கவலை இல்லை
அன்னை போன்ற அன்புள்ளம்
கொண்ட ஒரு ஆசிரியைக்கு,
அப்படி தன் குழந்தையின்
கல்வி நிலையை கூட
சரியாக கவனிக்கவிட்டாலும்,



தன் மாணவ செல்வங்களை
அக்கறையாய் தோளில் சுமக்க
நினைத்த ஓர் ஆசிரிய
அன்னைக்கு கிடைத்த பரிசு என்ன?

இன்று அந்த அன்னையின்
நிஜமான வாரிசுகளுக்கு தாய் இல்லையே?


என்ன கொடுமை?
சமூகம் எதை நோக்கி போகிறது?

எழுதியவர் : சாந்தி (12-Feb-12, 10:48 pm)
பார்வை : 166

மேலே