அக்கா...
அந்த வானத்தின் கை தவறியது.
ஒரு மழலை வீட்டில் தவழந்தது.
அன்னை இன்றெடுத்த அன்னை அவள்.
அவள் முதல் முத்தம் வாங்கிட வந்தவன் நான்.
என் வளர்ந்த நட்பு இவள்.
பிறந்த பாசமும் இவளே.
பள்ளி கற்று கொடுத்தும் பயன் இல்லையே,
நான் தேர்ச்சி பெற்றது உன் அன்பாலே.
ஏக்கம் என்பதை அறிந்து நான் வாசல் நின்றதே கிடையாதே.
என்னை உன் சின்ன இடுப்பிலே துக்கி நடந்தது மறக்காதே.
இன்று நீ மாலை சுடி போனால்,
அழுக மடியும் இல்லை எனக்கு.