சுண்டல் பையன்

உழைப்பாளர் சிலை - கீழே
உறங்கிக் கிடந்தான் ஒரு சோம்பேறி
உருண்டால் தூக்கம் போகுமாம்
உலகம் விட்டுப் போனவன் போல்
உர் உர் கொறட்டை கூட இல்லாமல் கிடந்தான்

கண்ணகி சிலை - கீழே
காதலர் இருவர்
காதலர் தினமாம் இன்று எனவே
காணச் சகிக்காமல் அவர்கள்
கிடந்த நிலை எழுத எழுத்தின் கற்பு போகும்...!

கடற்கரை மணலில் கால்கள் நடந்தது
கண்களில் பட்ட கருமாந்தரங்கள்
கவலை மழை நெஞ்சில் பொழிந்தது.....

சுண்டல் விற்கும் பையன் மட்டும்
சுறுசுறுப்பாய் கடமை மாறா உழைப்புடன்
கண்ணும் கருத்துமாய் பணி செய்தான்

கடற்கரை காற்று அவன் கிழிந்த ட்ராயருக்குள்
கருப்பு கலர் ஏசி மாட்டி விட்டிருந்தது - அதை
கவனித்து ரசிக்க அவனுக்கு நேரமில்லை
பசி.... பசி....அடுத்தவேளை கேள்விக் குறி...?

மறுநாள் பேப்பரில் பார்த்தேன்........
சுனாமி சுருட்டிக் கொண்டு போயிருக்க
அந்த சுண்டல் பையனின் கிழிந்த ட்ராயர் மட்டும் அங்கே கிழிபட்டு ஒட்டிக் கிடந்தது
செய்திதாளில் புகைப் படத்தில் இருந்தது...

கண்ணீர் வழிந்தது மனதில்......!

கண்டுவரலாம் என்று மீண்டும்
கடற்கரைக்கு மறுநாள் மாலையில் சென்றேன்

இப்போதும்

உழைப்பாளர் சிலை - கீழே
உறங்கிக் கிடந்தான் ஒரு சோம்பேறி
கண்ணகி சிலை - கீழே
காதலர் இருவர்......

இறைவனே ஏன் இந்த ஓர வஞ்சகம்

எங்கே அந்த சுண்டல் பையன் ?

எழுதியவர் : (13-Feb-12, 10:08 am)
பார்வை : 204

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே