எதிர்பார்ப்பு......
இது என்ன நான்தானா
புதிதாய் பிறந்தேனா....?
அறிமுகம் எதுவும் இல்லை,
அடிக்கடி கண்டதில்லை,
ஆனால் நீதான் என் வாழ்வு....
முதல் முதல் கண்டேன் அன்பே
முகம் அது நினைவில் இல்லை-ஆனால்
மூத்தோர்கள் சொன்னார்கள் நீதான் என் வாழ்வு...
கண்டதும் காதல் இல்லை
கை கோர்த்து சென்றதில்லை- ஆனாலும்
கண்ணா நீ தான் என்வாழ்வு....
அச்சாரம் போட்டாச்சு, அழகான
கனவாச்சு, ஹையையோ
முதன் முதல் காதல் வந்தாச்சு....
திருமண நாள் எண்ணி
நகர்ந்திடும் நாள் எல்லாம்
தினம் தினம் எதிர்பார்க்கிறேன்...
வழக்கம் போல் நான் இல்லை
கனவுகள் ரொம்ப தொல்லை
ஹையையோ தூக்கம் தொலைக்கிறேன்....