துடிப்பு

விரல் துடித்தால் இசை கூடும்
மங்கை கால் துடித்தால் நடனம் கூடும்
சிற்பி உளி துடித்தால் கல்லும் கடவுளாகக்கூடும்
கலைஞன் மனம் துடித்தால் கற்ப்பனைக்கூடும்
கற்பனை மனம் துடித்தால் கனவுகள் கூடும்

துன்பத்திலும் மனம் துடிக்கும்
இன்பத்திலும் மனம் துடிக்கும்
இன்பத்தில் துடித்தால் மகிழ்ச்சி கூடும்
துன்பத்தில் துடித்தால் நெஞ்சு நொறுங்ககூடும் !

அன்புமனம்

என்றும் அன்புடன்
இது ஒரு இதய "துடிப்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (15-Feb-12, 11:19 am)
Tanglish : thudippu
பார்வை : 342

மேலே