எங்கே போகுது என் நாடு ?...........

நட்பு என்பதை கற்பு போலவே
காத்து நிற்குதடி ஒரு கூட்டம்
கற்பு என்பதை அற்பமாக்கியே
வேட்டையாடுதடி ஒரு கூட்டம்

உயிரை கொன்று தான் வயிரை வளர்ப்பதென
உலகில் வாழுதடி ஒரு கூட்டம்
திருடிதின்பதே தினமும் வேலையென
தாக்கி தூக்குதடி ஒரு கூட்டம்

லஞ்சம் என்பதை கொஞ்சம் கூடவே
வெட்கம் இல்லாமல் வாங்குகிறார்
எஞ்சும் பணத்தையும் மிச்சம் இல்லாமல்
swiz bank இல் தான் போடுகிறார்

நாடு பூக்கடை ஊழல் சாக்கடை
அள்ளி இறைக்கிறது ஒரு கூட்டம்
ஊழல் என்பதை தடுக்க இயலாமல்
கூச்சல் போடுதடி ஒரு கூட்டம்

இத்துனை பாவங்கள் செய்து நடப்போரை
எத்துனை தெய்வம் தான் பார்க்குதடா
தெய்வம் நீ என்று மனதில் விதை கொண்டு
சீறி பாய்ந்துவிடு என் தோழா !!!!!!!!!

எழுதியவர் : KARTHIKEYAN (15-Feb-12, 8:43 pm)
சேர்த்தது : skrock91
பார்வை : 262

மேலே