உழைப்பு உயர்வு தருமே!

ஒருபொழுது இருந்தாலும்
ஓயாத உழைப்பாலே
ஒவ்வாத பொருளுமுண்டோ
கருபொருளை குறிவைத்து
கடுமையாய் உழைத்தபின்
கிட்டாத புகழுமுண்டோ

உடலுறவை பொய்யாக்கி
ஊனுணர்வை மெய்யாக்கி வரும்
உழைப்புக்கு நிகருமுண்டோ
கடலளவை சிறிதாக்கி
கடுகளவை பெரிதாக்கி
காட்டுவது உழைப்பு அன்றோ

காசினியில் பிறந்தவனை
சோம்பலினைத் துறந்தவனை
புகழ்க்காற்று வீசுமம்மா
காலையிலும் உறங்கிப் பின்
மலையினும் கிரங்குவோனை
கட்டெறும்பும் எசுமம்மா

காமத்திலே திளைத்தவனும்
காலத்தினைத் தொலைத்தவனும்
கலங்கும் நாளொன்று வருமே
சாமதிலும் உறக்கமின்றி
சாகும்வரை தயக்கமின்றி
சலியாத உழைப்பு உயர்வு தருமே !

எழுதியவர் : KARTHIKEYAN (15-Feb-12, 8:40 pm)
பார்வை : 899

மேலே