ஓட்டப் பந்தயம்
வீல்..........
விசில் சத்தம் கேட்ட உடனே
காற்றாய் பறந்தது
கால்கள் விர்ர் என்று.......
ரெண்டாவதாய் ஓடியவன் மனசு
முதலாவதாய் ஓடுபவனை முந்த
படு பயங்கரமாய் ஓடியது
முதலாவது ஓடியவனும் விடுவதாய் இல்லை
மூச்சிரைக்க
முழங்கால் பின்மண்டையில் படுமாறு
முந்திக் கொண்டு ஓடிய படி இருந்தான்
ஒரு திருப்பத்தில்.....
தடால் என்று கால் தடுக்க
தன நிலை மீறி விழுந்தான் முதலாமவன்
ரெண்டாவதாய் வந்தவன் இதுவே சமயம் என்று
முந்தி இரண்டு அடி சென்றவன்
அப்படியே திரும்ப வந்து
முதலில் வந்தவனுக்கு
முதலுதவி செய்து........
இப்போ நீ ரெடியா ? ஓடுவோமா ? என்றான்
மீண்டும் தொடர்ந்த பந்தயத்தில்
மீண்டும் முதலாமவனே முதலில் வந்தான்
ஓடும்போது அவன் மனதில் ஒரு எண்ணம்
வேகத்தை குறைத்தான் மெல்ல மெல்ல
இருவரும் ஒரே சமயத்தில்
வெற்றிக் கோட்டை தொட்டார்கள்
இதில் வென்றது - உண்மையில் - யார் ?
இருவரும் வெற்றி பெறவில்லை
உண்மையில் வெற்றி பெற்றது
மனித நேயமே
******* கேட்டுச் சுவைத்ததை கவி அடிப்படையில் கொடுத்தேன்...... என் சொந்த கருத்து அல்ல