எனது வாழ்த்துக்கள் என் தோழியே ..!!

வாழ்த்திடுவேன் நீ என்றும்
வாழ்ந்திட ..

இருமனம் சேர்ந்து
ஒருமனமாகும் உனது
திருமணதிற்கு
எனது வாழ்த்துக்கள்
என் தோழியே ..!!

அன்பின் உருவா இரு
கணவனை மனதில் சுமந்து
அன்னை ஆயிடு .!!

ஆசையாய் உருகிடு
அவன் உச்சி முகர்ந்து
ஆதரித்திடு...!!

இன்பமாய் அவன் வாழ
நீ வேண்டிடு
இன்முகம் கொண்டு வாழ்த்திடு ..!!

ஈசனிடமும் முறையிட்டு
அவன் ஆயுள் நீல
ஈகை பல செய்திடு..!!

உருவாயிறு
அவன் உடலின்
உயிராய் இரு ..!!

ஊக்கம் பல அளித்து
அவன் வெற்றிக்கு
ஊற்றாய் இரு ..!!

எந்த ஒரு நிமிடமும்
அவன் மகிழ்ந்திட-உன் இன்பம்
எல்லாம் துறந்திடு ...!!

ஏற்றங்கள் பல
அவன் கண்டிட
ஏணி ஆகிடு ..!!

ஐயம் தவிர்த்து
அவன் உயிர் காக்க
ஐவர் படை ஆகிடு ..!!

ஒவ்வொரு பொழுதும்
அவன் நினைப்பில்
ஒருமனதாய் வாழ்ந்திடு .!!

ஓராயிரம் கனவுகள்
அவன் காண அதை நினைவாக்க
ஓயாமல் உழைத்திடு ...!!

ஒளவை கண்ணட தமிழ்போல
அவன் மனம்
ஒளவலவும் கொள்ளை கொண்டிடு ..!!

ஏற்றம் மட்டும் நீ கண்டிட ,
உன்னவன் கரம் கோர்த்து ,
நடந்திடு தோழியே ....!!
இன்பமும்,அமைதியும் மட்டுமே
உன்னை சேர்ந்திடும்
என்றும் உயிர் தோழனாய் இவன் இருக்க..
என்றும்...என்றென்றும்..
ஜீவன்...!!!

எழுதியவர் : Jiivan (15-Feb-12, 9:43 pm)
பார்வை : 503

மேலே