வேண்டாமே காதல்...

ஆசையை ஈன்ற அன்னை எனும் தெய்வம்
பசியே அறியாமல் பரிவாய் பசியாற்றினாள் ...
தன் மருத்துவம் பார்க்க
கணவன் தந்த பணத்தை..,
என் செலவிற்க்காய் அன்றெனக்கு தந்தாள்..!!

நல்லுடல் நான் கொள்ள,
நல்லொழுக்கம் கற்று தந்து
தன்னுடல் பார்க்காமல் நலிவுற்ற என் தந்தை..,
இனிமையை நான் காண
இன்னல் பல சந்தித்து..
இவ்வுலகமே எனை போற்ற
நெடுநாளாய் பாடுபட்டார்...!!

வளையல் வாங்க சேர்த்து வைத்த
உண்டியல் பணத்தை சுற்றுலா நான் செல்ல,
உடைத்து கொடுத்து வாஞ்சையோடு
வழியனுப்பிய அக்காள்..!!

நான் என்ன சொன்னாலும்
எது கேட்டு நின்றாலும்
உடன் பிறவா உடன்பிறப்புகளாய்
செய்து தந்த நண்பர்கள்....

என...

எனக்காக அழ எத்தனையோ பேர் இருக்க,
என்னை அழவைக்கும்
காதலேனக்கு வேண்டாமே....

எழுதியவர் : கவி மணி (17-Feb-12, 11:48 am)
Tanglish : vendaamey kaadhal
பார்வை : 398

மேலே