கட்டி முத்தம்...
கட்டிப்பிடித்து கொட்டிக்கொடுத்த
முத்தமெல்லாம்
என்னை சத்தமின்றி
சாகடிக்குது....!
நோகடிக்குது....!
தேடிப்பிடிக்க தேசமெல்லாம்
திரிகிறேன்....
உயிர் கொடுத்த உறவொன்று
நம் உயிர் எடுக்குமென்று
யாருக்கு தெரியும்...?
முத்தமிட்ட இடத்து
ஈரங்கள் காயலாம்....
மனம் தொட்ட நினைவுகள்
என்றும் பசுமையாய்....!
உன் நினைவை
சுமந்து
எனக்கான வாழ்வை....
சுகமாக்கி வாழவும்
பாரமாக்கி வாழவும்
கற்றுக்கொள்கிறேன்....!