என் பாரத தாயே!

புற்றரிசி சாதம்
புலம்பும் எறும்புகள்
மரபணு மாற்றப்பட்ட விதைகள்
மரத்தில் தொங்கும் விவசாயி

ஆடுகளமாய் போன
வயல் வெளிகள்

எம்புட்டு பெரிய மனிதன்
இம்புட்டு பணத்த
ஒரு ஓட்டுக்காக கொடுத்திருக்காக
அவுகளை போயி திட்டுறியே
ஒரு அப்பாவிப் பெண்ணின் புலம்பல்

பணத்தின் மீது படுத்து உறங்கும்
பாராளுமன்ற ஜனநாயகம்

எலிகளெல்லாம் ஏறி விளையாடும்
என் பாரத தாயின் மடிகள்

இடையிடையே கேட்கும்
இந்தியா ஒளிர்கிறது கோசம்

இதற்கு மத்தியில்
என் பாரத தாய்
நெருங்கிக் கொண்டிருக்கிறாள்
ஆகஸ்ட் 15 ஐ ..........................

எழுதியவர் : porchezhian (17-Feb-12, 8:05 pm)
பார்வை : 1440

மேலே