தளராதே ..
பூமிக்கு வளமூட்ட
மேகக்கூட்டங்கள் அழுகிறதே !
தன் மகளாகிய
மழை நார்களை
பிரிந்ததினால் .....
உனக்கும் வளமூட்ட
எதனை பிரிந்திருக்கிறாய் ..
முயற்சியையா?
எதனை தொலைத்திருக்கிறாய் ..
மகிழ்ச்சியையா ?
எதனை இழந்து இருக்கிறாய் ...
நேரத்தையையா ..
கடிகார முட்கள்கூட
ஓயாமல் சுற்றினால்தான்
சரியான காலம காட்டுது ..
நீயும் தளராமல்
முயன்றால் தான்
நினைத்தது பலிக்கும்
காலத்தை வீணடிக்காமல்
உழைப்பை உரமாக்கு..
ஒருநாள் வளர்வாய் ..
பயன் தருவாய்...