பர்பி
சிற்பியின் பொன் உளியாய்
பர்பி...!
கண்ணாடிக்குள்
கட்டி வைக்கப்பட்ட
பொற் கோவிலாய்
கவிக் கண்களில்
மங்கல நிறம்
மஞ்சளாய் பர்பி...!
பொன்னில் செய்யப்பட்ட
பெருமாள் கோவில் கிரீட பாதம்
பர்பி
குறிப்பு :
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
கவிதையில் வந்துள்ள பொருள் நயம்:
கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்ட லாலாக்கடை பர்பியானது, சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற் கோவிலையும், பெருமாள் கோவிலில் தலையின் வைக்கப்படும் பாதம் போன்றும் உள்ளதாக வர்ணிக்கப் பட்டுள்ளது
கடவுளை பர்பியிலும் காணலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது