படைத்தல்....

பூமிக் காதலியை
வான் காதலன் அணைக்க
ஒரு கோடி கரங்கள்
................மழை!!!

காதலியை அணைக்க
காதல் வானம் காட்டும்
வர்ண ஜாலம்
........ வானவில்!!!

வான், பூமி காதலை
பூமி குழந்தைகள் அறிய
வானம் சொல்லும் கட்டியம்
........... இடி,மின்னல்!!!

வில்லாய் வளைந்து
வான வில்லாய்
........... வளைந்து!!!

இடி, மின்னல் எனும்
ஓசையும்,ஒளியுமாய்
............... இணைந்து!!!

மழையாய் அணைத்து
உயிர்களின் படைத்தலோ
............. ஒரு மழை?

எழுதியவர் : (18-Feb-12, 11:51 pm)
பார்வை : 248

மேலே