என் காதலை நான் அவளிடம் சொல்லாமலே
![](https://eluthu.com/images/loading.gif)
இரண்டு வருடம் நல்ல தோழியாக பேசினாள் !
அனைத்துலகும் மறந்துவிடும் !
அவள் மழலை மொழி கேட்கும் போது
சண்டை போடும் போது கூட !
அவளை கேவலமாக நான் நினைத்ததுண்டு !
என் தோழி என்பதால் பலமுறை நான்
அவளை திட்டி இருக்கிறேன் ,,,
பதிலுக்கு அவளும் என்னை வசை மாரிபொழிந்ததுண்டு !
அவளை பற்றிய அனைத்தும் என்னிடம் பகிர்ந்ததுண்டு !
அவள் அண்ணன் மொபைல் நம்பர் கூட
அடிகடி சொல்லுவாள் உன் நட்பு கடைசிவரை வேண்டும் என்று !
எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னுடன் பேச மட்டும் அவள்
மறுத்ததில்லை ! ,
நல்ல நண்பன் என்றுதான் நினைத்தாள் என்னை
நானும் அப்படிதான் நினைத்தேன் ...
நம்பிகையான நல்ல நட்பு தொடர்ந்தது !
அனைவரை சேர்க்கும் அந்த காதல்
என் அன்பு தோழியே என்னிடம்
இருந்து பிரித்து விட்டது !
அந்த காதல் மலர்ந்த இடம் என் மனது !
காதலை சொன்னேன் காணாமல் போய் விட்டாள் !
இன்று நானோ தனிமையில் !
வெகு காலம் ஆனாலும் என் நினைவுகள்
அவளுக்கு வரவே இல்லை !
இன்னொருவனை காதலிக்கிறாளாம் !
நீங்காத அவள் நினைவுகள் என்மனதை
உறுத்திக்கொண்டே இருக்கிறது !
என்னை பற்றி அவள் தோழியிடம் சொன்னாளாம்
அவனுக்காக தான் போன் நம்பர் மாற்றினேன் என்று !
காதலியாக நினைத்த என் தோழி !
இனி திரும்பவும் வருவாளா .....................
ஐயோ மரண வேதனை...............................
என் காதலை நான் அவளிடம் சொல்லாமலே
இருந்திருக்கலாம் ! என் அஞ்சலி காக
அரவிந்த்