இலவசங்கள் தேவையில்லை
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்கிறேன்,
அரசியல்வாதிகள் அடிக்கடி
சொல்லும் ஏமாற்று வார்த்தை;
இறைவனைக் காண
எத்தனை காலம்தான்
ஏழையாகவே மக்களை
வைத்திருக்கப் போகிறீர்கள்;
சுயமரியாதை
உள்ளவர்கள் நாங்கள்,
எங்கள் குடும்பத்தையும்
பிள்ளைகளையும் காக்க...,
இலவசங்கள்
தேவையில்லை எங்களுக்கு,
தேவை எங்கள் திறமைக்கு ஏற்ற
வேலை வாய்ப்புகளே!