!!! முதல் பிறந்த நாள் !!!

விடியலை கொடுக்கும்
சூரியனாய் உதித்தவன்...
இருளை அகற்றும்
நிலவாய் முளைத்தவன்...
மனமென்ற நிலத்தில்
விதையாய் விழுந்தவன்...
மலர்முகம் காட்டி
மனம் குளிர வைத்தவன்...
தாய்க்கு தகப்பனாய்
தாய் மடியில் பிறந்தவன்...
தித்தி தித்தி தேன்தமிழ் பேசி
தெவிட்டா இன்பத்தை
தினம் அள்ளி தந்தவன்...
வானமும் பூமியும்
அவன் புகழ் பாடிட
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...!!!
இன்று முதல் பிறந்த நாளை கொண்டாடும்
எனது ஒரு வயது நண்பன் ''ரித்திக்'' அவர்களுக்கு
இந்த கவிதையை பரிசாக்குகிறேன்....